Sri Lanka
February 4, 2012  11:04:PM

Adaderana Breaking News:

»  மாடு வாங்க பணத்துடன் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டார்

அம்பாறை கல்முனைக்குடியிலிருந்து மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்திற்கு கடந்த வியாழக்கிழமை ஒரு இலட்சத்து 35ஆயிரம் ரூபா பணத்துடன் மாடு வியாபாரத்திற்கு சென்றவர் இன்று பிற்பகல் வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கறுத்த பாலம் அருகே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

»  மலையகத்தில் மதுபானத்துக்கு எதிராக போராட்டம்

மலையகத்தில் மதுபானத்துக்கு எதிராக போராட்டம்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஏற்பாட்டில் இன்று நுவரெலியா மாவட்டத்தில் மதுபானப் பாவனைக்கெதிரான போராட்டங்கள் இடம் பெற்றன.

»  நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி

நாட்டை பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு விடுதலைப் புலிகள் முயற்சி

வெளிநாடுகளிலுள்ள விடுதலைப் புலிகள் நாட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்வதற்கு முயற்சிப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

»  மரத்துடன் மோதுண்டு பஸ் விபத்து: 4 வயதுச் சிறுமி பலி

மரத்துடன் மோதுண்டு பஸ் விபத்து: 4 வயதுச் சிறுமி பலி

பாதெனிய - அநுராதபுர வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததுடன் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

»  தோட்ட காவலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

தோட்ட காவலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு

அட்டன் டிக்கோயா பிரதேசத்திலுள்ள புளியாவத்தை தோட்டத்தின் காவலாளி ஒருவர் சடலமாக இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

»  யாழ். சிறையில் எட்டு கைதிகளுக்கு விடுதலை

யாழ். சிறையில் எட்டு கைதிகளுக்கு விடுதலை

யாழ்.சிறைச்சாலையில் கடந்த ஆறுமாதங்களாக தடுத்துவைக்கப்பட்ட சிறிய குற்றங்கள் செய்து தண்டப்பணம் கட்ட முடியாத எட்டுச் சிறைக் கைதிகள் இன்றைய தினம் இலங்கையின் 64 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

»  இம்முறை மஹேல டெல்லிக்கு, முரளி பெங்களூருக்கு

இம்முறை மஹேல டெல்லிக்கு, முரளி பெங்களூருக்கு

இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்தன 1.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு டெல்லி டேர்டெவில்ஸ் அணி வாங்கியுள்ளது.

»  யாழ் நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆராய்வு

யாழ் நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் ஆராய்வு

யாழ்.மாவட்டத்தின் தற்போதய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்பின் பிரதிநிதிகள் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கவுடன் கலந்துரையாடியுள்ளனர்.

»  மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு விபத்தில் ஒருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

»  யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி இல்லை

யாழ்-ஒமந்தை புகையிரதப் பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு மிதிவெடி இல்லை

ஒமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையான புகையிரதப்பாதையில் 63 கிலோ மீற்றர் தூரத்திற்கு முதற்கட்டமாக மிதிவெடியகற்றும் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

»  கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டது

கண்டி - மஹியங்கனை வீதி மீண்டும் திறக்கப்பட்டது

உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி மீண்டும் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.

»  நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது!

நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது!

நிறைவேற்று அதிகாரங்களை மக்களின் விருப்பத்துக்கு எதிராக செயற்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

»  தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை

தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளுக்கு விடுதலை

நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத் தண்டணை அனுபவித்து வரும் கைதிகள் இன்றைய தினம் விடுதலை செய்யப்படுகின்றனர்.

»  தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றம் - ஜனாதிபதி

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றம் - ஜனாதிபதி

தேசிய ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு உரிய இடம் பாராளுமன்றமே என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

»  புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன

புதியதோர் தேசத்தின் அபிவிருத்திக்கு கட்டியம் கூறும் வழிகள் திறக்கப்பட்டுள்ளன

சுதந்திரம் குறித்த உண்மையான மதிப்புணர்வுடன் 64 வது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்துள்ளமை எமது தேசத்தின் அதிர்ஷ்டமாகும். இன்று கம்பீரமாய்ப் பறக்கும் எமது தேசியக் கொடி புதியதோர் தேசத்திற்குக் கட்டியம் கூறுவதாயுள்ளது.

»  ஒப்பந்த்தில் கூறப்பட்டவையும் தொழிலாளர்களுக்குக் இன்னும் கிடைக்கவில்லையாம்

ஒப்பந்த்தில் கூறப்பட்டவையும் தொழிலாளர்களுக்குக் இன்னும் கிடைக்கவில்லையாம்

தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களுக்கு கடந்த மாத இறுதிக்குள் தீர்வை வழங்குவதாக தொழில் அமைச்சரிடம் உத்தரவாதம் அளித்திருந்த போதும் அது எதுவும் இன்றுவரை

»  தொடரும் வீதி விபத்துக்கள், கைக்குழந்தை ஐவர் படுகாயம்

தொடரும் வீதி விபத்துக்கள், கைக்குழந்தை ஐவர் படுகாயம்

கல்முனை — பொலநறுவை நெடுஞ்சாலையில் பிள்ளையாரடியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் கைக்குழந்தை ஐவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

»  மண்சரிவு அபாயம், வீதி மூடப்பட்டது

மண்சரிவு அபாயம், வீதி மூடப்பட்டது

மண்சரிவு அபாயம் காரணமாக உடுதும்பர முதல் மஹியங்கனை கண்டி வீதி தற்காலிகமாக மூடப்பட்டடள்ளது. இதனால் வாகன செலுத்துனர்களை மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

»  கச்சத்தீவை விரைவில் மீட்டே தீருவேன் - ஜெயலலிதா உறுதி

கச்சத்தீவை விரைவில் மீட்டே தீருவேன் - ஜெயலலிதா உறுதி

தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கான ஒரே தீர்வாக உள்ள கச்சத்தீவை நிச்சயம் மீட்டே தீருவேன் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார்.

»  யாழில் மிக உயரமான கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

யாழில் மிக உயரமான கட்டிடத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்

யாழ். ஹோட்டேல்ஸ் பிரைவட் லிமிட்டெட்டின் ஜெட்விங் யாழ் ஹோட்டலுக்கான அடிக்கல்லை இன்று பிற்பகல் ஒரு மணியளவில் பிரதமர் டி. எம் ஜயரட்ன வைபவ ரீதியாக நாட்டி வைத்தார்.

»  சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடத்திற்காக 8,000 பொலிஸார் கடமையில்

சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடத்திற்காக 8,000 பொலிஸார் கடமையில்

இலங்கையின் 64வது சுதந்திர தினம் மற்றும் தேசத்துக்கு மகுடம் கண்காட்சிக்காக 8,000க்கும் அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

»  இரத்தினபுரியில் தாயும் மகளும் மர்மக் கொலை

இரத்தினபுரியில் தாயும் மகளும் மர்மக் கொலை

இரத்தினபுரி கஹவத்த கொடகெதற பிரதேசத்தில் மர்மமான முறையில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

»  பைத்தியம் பிடித்துள்ளவர்களுக்கு வைத்தியம் செய்ய எனக்கு நேரம் இல்லை

பைத்தியம் பிடித்துள்ளவர்களுக்கு வைத்தியம் செய்ய எனக்கு நேரம் இல்லை

எனது முகத்துடன் கோபம் என்பதற்காக எனது மூக்கையே வெட்டிக்கொள்ளும் முட்டாள்தனமான காரியத்தை நான் ஒருபோதும் செய்வதில்லை

»  நழுவிப் போன மூன்: இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா உறுப்பு நாடுகள்

நழுவிப் போன மூன்: இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா உறுப்பு நாடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மார்ச் மாத அமர்வின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பு நாடுகள் தெரிவித்துள்ளன.

»  இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி

இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சி

இலங்கைப் பொருளாதாரம் ஸ்திரமான நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 




Copyright © 2008 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal. | Disclaimer