யு.எஸ். ஓபன் டென்னிஸில் செரீனா வில்லியம்ஸ் சம்பியன்
September 11, 2012 08:49 am
யு.எஸ். ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் கைப்பற்றினார்.
நியூயார்க்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரஸின் விக்டோரியா அசரென்காவை அவர் எதிர்கொண்டார். இதில் 6-2,2-6,7-5 என்ற செட் கணக்கில் செரீனா வென்று சாம்பியன் ஆனார். இதன் மூலம் 4-வது முறையாக யு.எஸ். ஓபன் பட்டம் வென்றுள்ளார்.
இந்த மாதம் 26-ம் திகதி தனது 31-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள அவர், மிக அதிக வயதில் யு.எஸ். ஓபன் டென்னிஸில் வென்ற வீராங்கனைகளில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதற்கு முன்பு அவுஸ்திரேலியாவின் மார்கரெட் கோர்ட் தனது 31-வயதில் யு.எஸ். ஓபனில் பட்டம் வென்றார்.
முன்னதாக இந்த ஆண்டில் விம்பிள்டன் பட்டத்தையும் செரீனா வென்றார்.
அவுஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன் ஆகியவற்றில் தலா 5 முறை, யு.எஸ். ஓபனில் 4 முறை, பிரெஞ்சு ஓபனில் ஒருமுறை என 15 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை செரீனா கைப்பற்றியுள்ளார்.
இதுதவிர மகளிர் இரட்டையர் பிரிவில் 13 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுளார்.
இத்தாலி ஜோடி வெற்றி: மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டமும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இத்தாலியின் சாரா இர்ரானி, ராபெர்டா வின்சி ஜோடி, செக் குடியரசின் ஆன்ட்ரியா லவாகோவா, லூசி ஹ்ராடெகா இணையை 6-4,6-2 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் ஆனது..

- > 7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது
- > ஜேவிபி ஆர்ப்பாட்டம்: மருதானையில் வீதிக்கு பூட்டு
- > துண்டுப்பிரசுரம் விநியோகித்ததாக கைதாகிய இரு தமிழ் இளைஞர்கள் விடுதலை
- > புதையல் தேடிய மந்திரவாதி உள்ளிட்ட எழுவர் கைது
- > தேசிய வெங்காய செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை
- > பூணாக்கலை தொழிலாளர்களை தாக்கிய 12 பேர் அடையாளம் காட்டப்பட்டனர்
- > ஹட்டன் கடை தொகுதியில் தீ
- > கொழும்பு துறைமுக களஞ்சியசாலையில் தீ
- > யாழில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கடலூர் மீனவர்கள் 26 பேர் நாடு திரும்பினர்
- > கிழக்கு மாகாண முதலமைச்சரின் தடையை மீறி சாய்ந்தமருதில் வாசிகசாலை திறப்பு