கொத்தனார் துறையின் அபிவிருத்தியை முன்னிட்டு லபார்ஜ் நடத்திய செயலமர்வு

September 11, 2012  09:36 am

Bookmark and Share
கொத்தனார் தொழிலாளர்கள் புதிய மற்றும் பாதுகாப்பு முறைமைகளை பயன்படுத்தி உற்பத்தி திறனை அதிகரிப்பது எவ்வாறு என்பது தொடர்பில் அறிவுறுத்தும் செயலமர்வொன்று லபார்ஜ் மஹாவலி நிறுவனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் இடம்பெற்றது.

நிர்மாணத்துறை சார்ந்த படைப்புக்களை மேற்கொள்ளும்போது எத்தகையை பாதுகாப்பு முறைமைகளை பின்பற்ற வேண்டும் என்றும் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் தொடர்பிலும் செயலமர்வில் வலியுறுத்தப்பட்டது.

மேஷன் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படக்கூடிய விபத்துக்கள் குறித்தும் அவற்றை தடுத்துகொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அளுத்கமை ´ரிவர்டேல் ரிசோட்டில்´ நடைபெற்ற செயலமர்வில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன் 15 வருடத்துக்கு மேலாக கொத்தனார் தொழிலில் ஈடுபட்ட பலர் கலந்துகொண்டனர்.

கொத்தனார்கள் தமது தொழிலில் ஈடுபடும்போது புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதேநேரம் அவை பாதுகாப்புக்கு உகந்ததா என்பது தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என நிர்மாணத்துறை வல்லுனரும் ஆய்வாளருமான சுனில் கப்புகே உரையாற்றுகையில் தெரிவித்தார்.

கொத்தனார்கள் தமது வாழ்க்கையை பணயம் வைத்து மிக ஆபத்தான தொழிலை செய்கின்றதால் அவர்கள் தொழில் யுத்திகளை கையாள்வதும் சுற்றுப்புறம் தமது பாதுகாப்புக்கு உகந்ததாக உள்ளதா என்பது தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என லபார்ஜ் பிராந்திய விற்பனை முகாமையாளர் சேனக்க குணதிலக்க சுட்டிக்காட்டினார்.

பாரம்பரிய கொத்தனார்களாகிய தாம் புதிய தொழில்நுட்பத்தின் அவசியத்தையும் பாதுகாப்பாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்துகொண்டதாகவும் தமது தொழிலை பல்வேறு புதிய முறைகளில் கீழ் முன்னெடுக்க கிடைத்துள்ளதாகவும் சுகாதாரம், பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு விடயங்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பம் கிட்டியமை சாலச்சிறந்ததென கலந்துகொண்ட கொத்தனார்கள் தெரிவித்தனர்.

அத்துடன் இத்தொழிலில் ஈடுபடும் இளையவர்களின் எண்ணிக்கை குறைவடைவதால் தொழிலை பிரபல்யப்படுத்தி அவர்களையும் இதன்பால் ஈர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிர்மாணத்துறையில் ஆள்வாளரான சுனில் கப்புகே கூறினார்.

இலங்கையில் சிறப்பானதொரு கொத்தனார் தொழிலை அபிவிருத்தி செய்து அதனை முன்னெடுப்பதற்கான தேசிய கொள்கை திட்டத்துக்கு அமைய லபார்ஜ் மஹாவலி சீமெந்து அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இச்செயலமர்வில் லபார்ஜ் மஹாவலி மெரீன் சிமென்ட் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

லபார்ஜ் ஸ்ரீலங்கா

சுவிற்சர்லாந்தின் மெரீன் சீமெந்து நிறுவனம் கொள்வனவு செய்ததையடுத்து 1980 முதல் இலங்கையில் லபார்ஜ் ஸ்ரீலங்கா நிறுவனம் அதன் குறியீட்டு பெயரை ´மஹாவலி மெரீன் சீமெந்து´ என்பதன் கீழ் நிர்மாணத்துறைக்கு சீமெந்துகளை வழங்குகின்றது. லபார்ஜ் நிறுவனம் தமது செயற்பாட்டு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்வதுடன் பிரதான களஞ்சியசாலை மற்றும் பொதியிடல் பிரிவு துறைமுகத்தில் உள்ளது. நிர்மாணத்துறையின் பாதுகாப்பு மற்றும் தரம் தொடர்பாக நிறுவனம் அதிக அக்கறையுடன் செயற்படுகின்றது. உயர்ரகத்தையும், நம்பிக்கை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை எதிர்காலத்துக்கு வழங்கும் நோக்கில் நிறுவனம் திடசங்கற்பத்துடன் செயற்படுகின்றது.

லபார்ஜ் கட்டட நிர்மாணப்பொருட்கள் மற்றும் கொன்கிறீட்டுக்கான முன்னோடி நிறுவனமாக உள்ள லபார்ஜ் 68,000 ஊழியர்கiளை தன்னகத்தே கொண்டுள்ளதுடன் உலகில் 64 நாடுகளில் இயங்கி வருகின்றது. 2011 லபார்ஜ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 15.3 பில்லியன் யூரோக்களாக பதிவாகியுள்ளது.

புவி வெப்பமடைவதற்கு எதிராக செயற்படும் திட்டத்தின் கீழ் லபார்ஜ் நிறுவனம் 500 நிறுவனங்களுக்கிடையில் நடத்தப்பட்ட ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் 10 நிறுவனங்களுக்குள் தரப்படுத்தப்பட்டுள்ளது.

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 
Most Viewed

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.