மரம் வீட்டுக்கா வெற்றிலைக்கா என்பது இன்று தெரியவரும்?
September 12, 2012 09:07 am
கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் நேற்று (11) கொழும்பில் கூடி ஆராய்ந்தது.
இந்த கலந்துரையாடல் நேற்று மாலை தொடக்கம் இரவுவரை பல மணிநேரம் நீடித்ததாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
கிழக்கில் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பன விடுத்துள்ள கோரிக்கைகள் தொடர்பிலும் அதன் சாதக பாதக நிலை தொடர்பிலும் நேற்றைய கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எனினும் நேற்றைய சந்திப்பில் இறுதி முடிவு ஒன்றை எடுக்க முடியாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் இன்று காலை மீண்டும் கூடுகிறது.
பெரும்பாலும் கிழக்கில் தமது ஆதரவு யாருக்கு என்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (12) அறிப்பார் என தெரிவிக்கப்பட்டுகிறது.
நேற்றைய சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கட்சியின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத், செயலாளர் நாயகம் ஹஸன் அலி உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உலமாக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
(அத தெரண - தமிழ்)

- > வாய் பேசமுடியாத சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய குடும்பஸ்தர்
- > முஸ்லிம்களுக்காக அமைச்சுப் பதவிகளை தூக்கி எறியவும் முஸ்லிம் அமைச்சர்கள் தயார்!
- > அம்பாறையில் நான்கு துப்பாக்கிகள் மீட்பு
- > ரயில் கடவை விபத்துக்களில் ஒருவர் பலி, ஒருவருக்கு காயம்
- > ப்ளே ஆப் சுற்றில் ஐதராபாத் : ஏமாற்றத்துடன் வெளியேறியது பெங்களூர்
- > ஹிலாரியை அந்த இடத்தில் சுட வேண்டும் : நிகழ்ச்சி தொகுப்பாளரால் சர்ச்சை
- > அமெரிக்க லாட்டாரியில் $590 மில்லியன் வரலாறு காணாத பரிசு
- > கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய மூன்று புள்ளிகளுக்கு தொடர்பு!
- > கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்தளிக்கவுள்ள சோனியா
- > விஜயின் சமூகப் பணிகளின் பின்னணி அரசியல் ஆசையா?