நவிபிள்ளையின் பிரதிநிதிகள் குழு வெள்ளியன்று இலங்கை வருகிறது
September 12, 2012 10:13 am
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுத் தலைவர் நவநீதம் பிள்ளையின் பிரதிநிதிகள் அடங்கிய குழு எதிர்வரும் 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ளது.
இலங்கை அரசின் அழைப்பின் பேரில் இக்குழு இலங்கை வரவுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை செயற்படுத்தல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் தேவைகளை கண்டறிதல் போன்ற காரணங்களுக்காக இக்குழு இலங்கை வருகிறது.
கடந்த மார்ச் மாதத்திற்கு 11 மாதங்களு க்கு முன்பே இலங்கைக்கு நேரடி விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்டறிய வேண்டுமெனக் கூறி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
அதனை ஏற்றுக்கொண்டிருந்த நவநீதம் பிள்ளை, நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டதும் இலங்கைக்கு விஜயம் செய்வதாக கூறியிருந்தார்.
அந்தவகையில் இலங்கையின் அழைப்பின் பேரிலேயே இக்குழு இலங்கை வரவுள்ளது. இக்குழுவின் விஜயத்தை தொடர்ந்து நவநீதம் பிள்ளையும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.
(அத தெரண - தமிழ்)

- > உயிர் கொடுத்த தந்தையே குழந்தையின் உயிரை பறித்த பரிதாபம்
- > இதுவரை 2424 தானசாலைகள் சோதனை
- > நூதனசாலை கொள்ளை கைதிகளை பிணையில் விடுவிக்க பணம் வாங்கியவர் கைது
- > காரைக்கால் மீனவர்கள் நாடு திரும்பினர்
- > பயங்கரவாதி, போராளி யார் என்பதை நமது சந்ததிகள் முடிவு செய்வார்கள்!
- > ரஷ்ய கடற்பரப்பில் நிலநடுக்கம்
- > இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டம்
- > ஸ்ரீசாந்துடன் எந்த தொடர்பும் இல்லை - லட்சுமிராய் விளக்கம்
- > இணைய ஆபாச கல்வியால் பாடசாலை சிறுவர்கள் பாதிப்பு
- > தமது செந்த இடங்களில் குடியேற்றுமாறு செட்டிகுளம் மக்கள் கோரிக்கை (படங்கள்)