Back to Top

எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வை பகிர்ந்துகொள்ளல் இணையத்தளம் அறிமுகம்

September 12, 2012  11:19 am

Bookmark and Share
எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ்க்கான லங்கா பிஸ்னஸ் கொலிஷன் (LBCH) மூலம் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொற்றுநோய்கள் குறித்த கல்வி மற்றும் தகவல்களை வழங்கும் முகமாக www.lbchconnect.com என்ற இணையத்தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிகழ்வில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தேசிய பணிப்பாளர் டொங்ளின் லீ கலந்து கொண்டிருந்தார்.

இந்த இணையத்தளம் குறித்து LBCH இன் தற்போதைய தலைவரும், ஸ்ரீலங்கா பிஸ்னஸ் ஒபரேஷன்ஸ் நிறுவனத்தின் தேசிய தலைவரும், செவ்றோன் லுப்ரிகன்ட்ஸ் லங்காவின் தலைவருமும் பணிப்பாளருமான கலாநிதி. கிஷூ கோம்ஸ், கருத்து வெளியிடுகையில் ´இவ் இணையத்தளமானது காலத்தின் தேவை. இலங்கையின் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, சுற்றுலாத்துறை துறைகளை சேர்ந்த பெரும்பாலானவர்களை சென்றடையும்´ என தெரிவித்தார். மேலும் ´LBCH ஆனது மக்களுக்கு ஏற்படுகின்ற தொற்றுநோய்கள் குறித்து கவனம் செலுத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பை வழங்கவுள்ளது´ என்றார்.

இவ்வருட திட்டமானது பேட்ஸ் ஸ்ராட்டஜிக் எலையன்ஸ் ;(Bates Strategic Alliance) மூலம் நெறியாள்கை செய்யப்பட்டுள்ளதுடன், சிவப்பு தலையணையில் ´விழிப்புணர்வை பகிர்ந்துகொள்ளுங்கள் எச்.ஐ.வியை அல்ல´ என்ற தொனிப்பொருளுக்கு அமைய, இலங்கையின் முன்னணி துறைகளை சேர்ந்த 60 டுடீஊர் அங்கத்தவர்கள் மத்தியில் இத்தலையணை கொண்டு செல்லப்பட்டது.

வேலைத்தளம் மற்றும் சமூகத்தில் காணப்படுகின்ற எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த பயத்தினை அகற்றி, விழிப்புணர்வை வழங்கும் முகமாக இத் தலையணையானது LBCH அங்கத்தவர்களான செவ்றோன், ஸ்டான்டர்ட் சார்ட்டட் வங்கி, ஜோன் கீல்ஸ், டி.எப்.சி.சி வங்கி, ஹற்றன் நஷனல் வங்கி, எடிசலாட், பிரண்டிக்ஸ், டயலொக், AMCHAM மற்றும் ஜெட்விங் போன்ற நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டது. மாலை நேர நிகழ்வுகளின் போது ஏனைய அங்கத்துவ நிறுவனங்களளுக்கும்; இத்தலையணை எடுத்து செல்லப்பட்டது.

கடந்த சில வருடங்களாக, எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் போன்றன பணியிட உற்பத்தியினை அச்சுறுத்தும் ஓர் காரணியாக இருந்து வந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் பணியிடத்தில் 74 மில்லியன் தொழிலாளர்கள் எயிட்ஸ் நோயின் தாக்கத்தால் இழக்க நேரிடலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இவ் விழிப்புணர்வு நடவடிக்கைகளின் மூலமாக புதிய தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கலாம். இத்திட்டத்திற்கு ஆதரவாக இலங்கையின் 67 முன்னணி வியாபார நிறுவனங்கள், எச்.ஐ.வி மற்றும் எயிட்சுக்கான லங்கா பிஸ்னஸ் கோலிஷன் (LBCH) உடன்; இணைந்து தமது பங்களிப்பினை வழங்கிவருகிறது.

இந்நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட 2007 ஆம் ஆண்டு தொடக்கம், விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் இலவச கருத்தரங்குகள் மூலம் பணியாளர்கள் மத்தியில் எயிட்ஸ் பரவுதல் குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. பணியாளர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுதல், களங்கத்தை இல்லாதொழித்தல், தொழில் குறித்த பகுத்தறிவு போன்ற சிக்கலான விடயங்களை கையாள்வதில் (LBCH) ஆனது ஒரு கட்டமைப்பின் கீழ் பொறுப்புணர்ச்சியுடன் செயற்படுகிறது.

மேலும் பணியாளர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை கட்டியெழுப்பி, ஆரோக்கியமான வேலைத்தள சூழலை ஏற்படுத்தி கொடுப்பதில் முனைப்புடன் செயற்படுகிறது. இந் நிறுவனமானது நிபுணர் பயிற்றுவிப்பாளர்கள் தலைமையில் ஒழுங்கு செய்யப்படும் எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து அங்கத்தவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவருகிறது. எச்.ஐ.வி குறித்து விழிப்புணர்வு வழங்கும் உள்நாட்டு சேவை நிறுவனங்களுடன் இணைந்து பணியிடத்துக்கு அவசியமான தகவல்கள் மற்றும் சேவைகளை வழங்கும் கோட்பாட்டின் கீழ் செயற்படுகிறது.

(LBCH) ஆனது பாராளுமன்றத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு அமைய ஏனைய நிறுவனங்களையும் வழிநடத்துகின்றது. மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு சேவைகளை வழங்கும் அமைப்புகளை அடையாளம் காண்பது (LBCH) இன் நீண்ட கால குறிக்கோளாகும். இப் பிரதேசங்களில் உள்ள பிற அமைப்புகளை, விழிப்புணர்வு திட்டங்களின் போது தங்கள் நிறுவனம் மற்றும் அங்கத்தவர்களுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆதரவு வழங்க எண்ணியுள்ளது.