யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்! அகதிகளுக்கு எச்சரிக்கை
September 12, 2012 12:45 pm
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற, மண்டபம் அகதிகள் மூவர் உட்பட 84 பேர், மங்களூருவில் சிக்கினர். இதை தொடர்ந்து, அகதிகளை ஏமாற்றும் இலங்கை முகவர்கள் குறித்து, முகாம்களில், கியூ பிரிவு பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
அவுஸ்திரேலியாவிற்கு படகில் அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றும் இலங்கை முகவர்கள், சென்னையில் தங்கி உள்ளனர்.
இலங்கை அகதிகளிடம், பல லட்சம் ரூபாய் வசூல் வேட்டை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அகதிகளை, பெங்களூரு வரவழைத்தனர்.
அங்கிருந்து மங்களூருவுக்கு அழைத்து சென்றனர். அங்கு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமை சேர்ந்த ரஜனி, சுசிபன், விநாயகமூர்த்தி உட்பட, 84 அகதிகளை, பொலிசார் பிடித்து சென்னைக்கு கொண்டு சென்றனர்.
ஒரு லட்சம் ரூபாயை முன்பணமாக தந்த அகதிகள், மேலும், மூன்று லட்சம் ரூபாய் தர ஒப்பு கொண்டுள்ளனர். முன்பணத்தை பலரிடம் வாங்கி கொண்டு, பொலிசுக்கு தகவல் கொடுத்துவிட்டு முகவர்கள் தப்பிவிடுகின்றனர்.
முகவர்கள் குறித்து தகவல் சேகரிக்க, தற்போது, கியூ பிரிவு பொலிசார், தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில், தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், "யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம்´ என அகதிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!