நடுச் சாமத்தில் மனைவி துரோகம்: விமானப்படை சிப்பாயை மண்வெட்டியால் வெட்டிய கணவன்
September 12, 2012 04:35 pm
சீகிரியாப் பகுதியில் மண்வெட்டியால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்த நிலையில் விமானப்படை சிப்பாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த சிப்பாய் தற்போது சீகிரியா அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று அதிகாலை 1.45 மணியளவில் இவ் விமானப் படைச் சிப்பாய் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக சீகிரியா பொலிஸார் தெரிவித்தனர்.
மகஹிம்பொஸ்ச பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான பெண் ஒருவருடன் இச் சிப்பாய் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 12.50 மணியளவில் அந்தப் பெண்ணுடன் குறித்த சிப்பாய் இருந்துள்ளதாகவும் அச் சந்தர்ப்பத்தில் அப் பெண்ணின் கணவன் கண்டு ஆத்திரமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சந்தர்ப்பத்திலேயே அந்நபர் மண்வெட்டியைக் கொண்டு விமானப் படைச் சிப்பாயை சரமாரியாக வெட்டியதாகவும் சீகிரிய பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
(அத தெரண தமிழ்)

- > உயிர் கொடுத்த தந்தையே குழந்தையின் உயிரை பறித்த பரிதாபம்
- > இதுவரை 2424 தானசாலைகள் சோதனை
- > ஸ்ரீசாந்துடன் எந்த தொடர்பும் இல்லை - லட்சுமிராய் விளக்கம்
- > நூதனசாலை கொள்ளை கைதிகளை பிணையில் விடுவிக்க பணம் வாங்கியவர் கைது
- > சரத் என் சில்வா மாவத்தையை பசில் நாளை திறக்கிறார்
- > பிரித்தானியாவிற்கு ஆட்களை கடத்துவதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு
- > காரைக்கால் மீனவர்கள் நாடு திரும்பினர்
- > தமது செந்த இடங்களில் குடியேற்றுமாறு செட்டிகுளம் மக்கள் கோரிக்கை (படங்கள்)
- > இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து செயல்பட திட்டம்
- > இணைய ஆபாச கல்வியால் பாடசாலை சிறுவர்கள் பாதிப்பு