T-20 உலகக் கிண்ண பயிற்சி போட்டியில் இலங்கை, அயர்லாந்து வெற்றி
September 14, 2012 08:29 am
உலகக்கிண்ண (டுவென்டி-20) பயிற்சி போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி கண்டது.
இலங்கையில் டுவென்டி-20 உலகக்கிண்ண தொடர் செப்ரெம்பர் 18ம் திகதி தொடங்குகிறது.
இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. இத்தொடருக்கு முன், ஒவ்வொரு அணிகளும் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.
இந்நிலையில் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் ஜயவர்தன, களத்தடுப்பை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சிம்மன்ஸ் (2), டுவைன் ஸ்மித் (5) ஜோடி மோசமான தொடக்கத்தை கொடுத்தனர்.
அடுத்து வந்த சார்லஸ் (30), டேரன் பிராவோ (29), போலார்டு (28*) கைகொடுத்தனர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை சார்பில் குலசேகர 2, மலிங்க, மெத்யூஸ் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
இலகுவான இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு தில்ஷான் முனவீர (24) ஓரளவு கைகொடுத்தார். பின்னர் இணைந்த தில்ஷான், ஜயவர்தன ஜோடி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
மேற்கிந்திய தீவுகள் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய இவர்கள் இருவரும் அரைசதம் அடித்தனர். இலங்கை அணி 15.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதேவேளை, மற்றொரு பயிற்சி போட்டியில் அயர்லாந்து, சிம்பாவே அணிகள் விளையாடியதில் நாணய சுழற்சியில் வென்ற சிம்பாவே அணித்தலைவர் பிரண்டன் டெய்லர், களத்தடுப்பை தெரிவு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணிக்கு நியால் ஓபிரையன் (62), கெவின் ஓபிரையன் (30*), ஜாய்சி (29) கைகொடுத்தனர்.
அயர்லாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் எடுத்தது. சிம்பாவே சார்பில் கிறிஸ் மபோபு 3 விக்கெட் வீழ்த்தினார்.
கடின இலக்கை விரட்டிய சிம்பாவே அணிக்கு மசகட்சா (44), எர்வின் (24) ஓரளவு ஆறுதல் அளித்தனர்.
மற்றவர்கள் ஏமாற்ற, சிம்பாவே அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 127 ஓட்டங்கள் எடுத்து 54 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
உட்சேயா (23), பிரைஸ் (17) அவுட்டாகாமல் இருந்தனர். அயர்லாந்து சார்பில் டாக்ரல், அலெக்ஸ் குசக் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர்.

- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > கிழக்கு மாகாண தவிசாளரின் தன்னிச்சையான முடிவை எதிர்த்து போராட்டம் (படங்கள்)
- > கொழும்பு - கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதிக்கு பூட்டு
- > 34 முகவர் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை
- > 13ம் திருத்தத்தை நீக்கக் கோரி பாராளுமன்றில் தனிநபர் பிரேரணை முன்வைக்க சம்பிக்க முடிவு
- > குடிகாரனின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று பொலிஸார் வைத்தியசாலையில்
- > ராஜபக்ஷ இந்தியா வரும்போது யாசின் மாலிக் தமிழகம் வரக்கூடாதா?
- > கேன்ஸ் திரைப்பட விழாவிலும் குழந்தையை மும்முரமாக கவனித்த ஐஸ்வர்யா ராய்
- > ரஜினி வழியில் சிம்பும் திடீர் திரும்பல்
- > கிரிக்கெட் சூதாட்டம்: இந்தி நடிகர் விந்து தாராசிங் கைது!