கிழக்கு முதல்வர் அமீர் அலி?

September 15, 2012  08:17 am

Bookmark and Share
இலங்கையின் கிழக்கு மாகாண சபைக்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ஏசிஎம்சி) கட்சியைச் சேர்ந்த அமீர் அலியை முதலமைச்சராக்க வேண்டும் என்று அக்கட்சி பரிந்துரை செய்துள்ளது.

அங்கு தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி ஒரு வாரமாகியும் கிழக்கில் இன்னும் யார் ஆட்சியை அமைப்பார்கள் என்று தெரியாத ஒரு சூழலே நிலவுகிறது.

ஆளும் கூட்டணியை எதிர்த்து போட்டியிட்டு 7 இடங்களை வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மத்தியில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் கோரியுள்ளன.

எனினும் அக்கட்சி இதுவரை தனது நிலைப்பாட்டை வெளியிடாத சூழலில் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்கப்படுவதில் இழுபறி தொடருகிறது.

கிழக்கு மாகாண சபையில் ஆளும் கூட்டணி 15 இடங்களையும் தனித்துப் போட்டியிட்டஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 இடங்களையும் பெற்றுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி என்பது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணிக்கே அளிக்கப்பட வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள 6 மாகாணசபைகளில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே முதலமைச்சராவுள்ளனர் எனவும் வட மாகாணத்துக்கு தேர்தல் நடைபெறும் போது தமிழர் ஒருவர் முதலமைச்சர் ஆவது உறுதியாகும் எனவும் கூறும் ரிஷாத் பதியுதீன், கிழக்கு மாகாணத்தில் மட்டுமே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராகும் வாய்ப்பு உள்ளது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தச் சூழ்நிலையிலேயே அமீர் அலியை தமது கட்சியும், தேசியக் காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவும் பரிந்துரை செய்துள்ளதாவும் அவர் கூறுகிறார்.

7 இடங்களை மட்டுமே வென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யதார்த்தமாக சிந்தித்து, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் எனவும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கூறுகிறார்.

தேர்தலுக்கு பின்னர் ஆளும் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அமைப்பதற்கு அரசுக்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்ததாகவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சுட்டிக்காட்டினார்.

(பீபீசி)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.