திருமலை - கொழும்பு ரயில் சேவை பாதிப்பு: யானை பலி

September 15, 2012  08:44 am

Bookmark and Share
திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் நேற்று (14) இரவு கெக்கிராவ – நெல்லியகம பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியது.

குறித்த ரயிலுடன் யானை ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

ரயிலுடன் மோதிய யானை உயிரிழந்தபோதும் ரயில் தடம்புரண்டபோது பயணிகள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.

விபத்தை அடுத்து திருகோணமலை - கொழும்பு ரயில் சேவை பலுகஸ்வேவ வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

(அத தெரண - தமிழ்)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.