இங்கிலாந்தில் இருந்து 300 இலங்கையர்கள் அடுத்த வாரம் நாடு கடத்தல்
September 15, 2012 10:58 am
இங்கிலாந்து நாட்டில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 300 பேர் அடுத்த வாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
300 பேர் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் சித்திர வதைக்கு உள்ளாக்கப்படுவர் என்பதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலும் அவர்களை இங்கிலாந்து குடிவரவு முகவர் நிலையம் திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதத்துக்குப் பின்னர் இரண்டாவது முறையாக பலநூறு பேர் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். ஜூன் மாதத்தில் 50 தமிழர்களை திருப்பி அனுப்ப இங்கிலாந்து அரசு நடவடிக்கை மேற்கொண்டிருந்த போதும் அந்த நாட்டு நீதி மன்றம் தலையிட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டால் இலங்கையில் ஆபத்து இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் மீளவும் இங்கிலாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளனர். அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில் திருப்பி அனுப்பப்பட்ட போது தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டோம் என்பதற்கு போதிய ஆதாரங்களை அவர்கள் சமர்ப்பித்திருந்தனர்.
எனினும் தற்போது திருப்பி அனுப்பப்படவுள்ள 300 பேரில் பெருமளவானோர் மாணவர்கள் எனவும் விசா காலம் முடிவடைந்த பின்னரும் தங்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டித்துள்ளன. திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள் இலங்கையில் மிக மோசமாக சித்திரவதைக்குள்ளாக நேரிடும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

- > வெசாக் தினமான இன்று பெளத்த பிக்கு தீக்குளிப்பு! (படங்கள்)
- > மேலும் 16 பேரை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா
- > ஆசாத் ராவுப்க்கும் சூதாட்டத்தில் தொடர்பா ? மாடல் அழகி பரபரப்பு பேச்சு
- > சென்னை சூப்பர் கிங்ஸூடன் மோதப்போவது யார் ? இன்று பலப்பரீட்சை
- > திருமண ஊர்வலத்தில் லொரி மோதி விபத்து: மணமகள் உட்பட 4 பேர் பலி! பலருக்கு கை, கால்கள் இல்லை
- > கேரளாவிலிருந்து ஆஸி. செல்ல முற்பட்ட 21 இலங்கை அகதிகள் கைது
- > பதில் பிரதம நீதியரசராக சலிம் மாசுப் நியமனம்
- > முல்லைத்தீவில், பாரதத்தின் மகிமை வாய்ந்த 12 சிவன் கோவில்களின் ஜோதி லிங்கங்களின் தரிசனம்
- > தோட்ட காணியை தனியாருக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
- > சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் மிகப் பெரிய துரோகம்!