அம்பாறைக்கு நாளை மின் இல்லை

September 15, 2012  11:08 am

Bookmark and Share
அம்பாறை கிரிட் உப மின் நிலையத்தில் அவசர திருத்த வேலை காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை ஆகிய மின் பொறியியலாளர் பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை எட்டரை மணி நேர மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

கல்முனை மின் பொறியியலாளர் பிரதேசங்களான கல்முனை. சாய்ந்தமருது, மாளிகைகாடு, காரைதீவு, கல்முனைக்குடி, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை, துறைவண்டியாமடு, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, 15ஆம் கொலணி, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், அட்டாப்பள்ளம், சம்மாந்துறை மற்றும் மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் இம்மின் வெட்டு இடம்பெறும்.

அத்துடன் அம்பாறை மின் பொறியியலாளர் பிரதேசங்களான அம்பாறை, கொண்டவட்டுவான், நாமல்ஓயா, இங்கினியாகல, உகண, மகாஓயா, பதியத்தலாவ, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, வீரகொட, மத்தியமுகாம், 11ஆம், 13ஆம், 5ஆம், 17ஆம், 21ஆம் கொலனிகள், கல்மடுவ, தீகவாபி, ஹிங்குராண, தமன, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில், பாணம, சியம்பலாண்டுவ மற்றும் தொம்பககாவெல ஆகிய பிரதேசங்களிலும் மின் வெட்டு இடம்பெறும்.

மட்டக்களப்பு மின் பொறியியலாளர் பிரதேசங்களான மண்டூர், சங்கர்புரம், கணேசபுரம், பெரியபோரைதீவு, கோவில்போரைதீவு, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை. பண்டாரியவெளி, தும்பங்கேனி.

திக்கோடை, 39ஆம் கிராமம், தாந்தாமலை, மகிழுர், கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா, எருவில், சிவபுரம், குருமண்வெளி, ஒந்தாச்சிமடம், கோட்டைக்கல்லாறு, களுவாஞ்சிக்குடி, பழுகாமம், முனைத்தீவு, களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிப்பாளையம், மாங்காடு, குருக்கள்மடம், கிரான்குளம். புதுக்குடியிருப்பு, தாழங்குடா, காத்தான்குடி, கல்லடி, சவளக்கடை, வீரச்சோலை, துறைநீலாவணை மற்றும் கல்லாறு ஆகிய பிரதேசங்களிலும் மின்வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

(அத தெரண - தமிழ்)

Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 
Most Viewed

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.