கிழக்கு தேர்தலில் எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை!
September 15, 2012 03:51 pm
செப்ரம்பர் 8ஆம் திகதி நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது மட்டகளப்பு மாவட்டத்தில் எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை, அவ்வாறு வெளிவரும் தகவல்கள் வெறும் வதந்திகளே என ஐக்கிய தேசியக் கட்சியின் கல்குடா அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை வேட்பாளருமான ஆ.ஜெகன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அவர் இன்று சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டகளப்பு மாவட்டத்தில் மோசடிகள் இடம்பெற்றது என்பது பொய்யான வதந்தியே தவிர உண்மை எதுவும் இல்லை என நான் கருதுகிரேன்.
இம்முறை கள்ளவாக்குகள் எதுவும் அளிக்கப்படவில்லை. அவ்வாறு கள்ளவாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் வாக்களிப்பு வீதம் கூடுதலாக இருந்திருக்கும் அறிவுள்ள நாம் சற்று சிந்திக்க வேண்டும்.
2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட த.தே. கூட்டமைப்பு போட்டியிட்ட போது 66235 வாக்குகள் பெற்றிருந்த போதிலும் ஐ.ம.கூட்டமைப்பு பெற்ற வாக்குகள் 62009 பெற்றிருந்தது. அதே வேலை த.ம.வி.புலிகள் தனித்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 16886. இம்முறை நடைபெற்ற கி.மா.சபைத் தேர்தலில் தேர்தலில் ஐ.ம.கூட்டமைப்பும் த.ம.வி.புலிகள் கட்சியும் இணைந்து போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 64190 ஆகும்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐ.ம.கூட்டமைப்பும், த.ம.வி.புலிகள் கட்சியும் பெற்ற வாக்குகளை கூட்டும்போது 78895 வாக்குகளாகும். இதனை உற்று நோக்குவோமானால் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐ.ம.கூட்டமைப்பு பெற்ற வாக்குகளை விட இம்முறை தேர்தலில் குறைவாகவே பெற்றுள்ளது.
ஆகவே இத்தேர்தலில் எந்தவித மோசடிகளும் இடம்பெறவில்லை என்பதனை தெளிவாக உணரமுடிகிறது. எனவே ஐ.ம.கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் மட்டகளப்பு மாவட்டத்தின் அபிவிருத்தியின் அடிப்படையிலும், ஸ்ரீல.மு.காங்கிரஸூக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் அரசாங்கத்திற்கு எதிரான பிரச்சாரத்திற்கும், மற்றும் த.தே.கூட்டமைப்பு இனவாதத்தை தூண்டியும் முள்ளிவாய்க்கால் மற்றும் அரசுக்கு எதிரான ஜெனிவா பிரச்சனையை சுட்டிகாட்டி வாக்குகளைபெற்றது.
இம்முறை ஐ.தே.கட்சி வீழ்ச்சிக்கு காரணம் மட்டகளப்பு மாவட்டத்தில் ஒழுங்கான தலைமைதுவம் இல்லாமையும் த.தே.கூட்டமைப்பின் இனவாத பிரச்சாரமும் அதாவது பாராளுமன்ற உறுப்பினர் சிலர் ஐ.தே.கட்சி சிங்கள கட்சி என்றும் அவ்வாறு வாக்களித்தால் அந்த வாக்கு முஸ்லிம்களுக்கு போய்விடும் என்று இனவாத பிரச்சாரம் செய்தமை.
இப்படி எல்லாம் கூறிவிட்டு தற்போது கி.மா.சபையை பிடிப்பதற்கு ஐ.தே.கட்சியையும் ஸ்ரீல.மு.காங்கிரஸூக்கு முதலமைச்சர் தருவதாகவும் இன்னும் என்ன வேண்டுமானாலும் தருகின்றேன். வாருங்கள் வாருங்கள் என்று கெஞ்சி கூப்பிடுகின்றார் த.தே.கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்.
எனவே இதனை மக்கள் தெளிவாக விளங்கிக்கொள்வதோடு எதிர்வரும் காலங்களில் தெளிவாக சிந்தித்து வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.
(அத தெரண நிருபர்)

- > தாயை தாக்கிய ரோஹண விஜயவீரவின் மகள் கைது
- > பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை
- > பகிஸ்கரிப்பிற்கு முன்னதாகவே அரசு அச்சமடைந்து விட்டது - ரணில் பேச்சு
- > யுத்தத்திற்கு பின்னர் பெண்கள் மீதான வன்செயல்கள் அதிகரிப்பு!
- > இனி நியூயோர்க்கில் பெண்கள் மேலாடை அணியாமல் திரியலாம்!
- > சிங்கம் சூரியாவுடன் மோதும் தலைவா விஜய்!
- > தலையில் சுடப்பட்டு எட்டரை அடி உயர யானை பலி
- > கஜேந்திரகுமாரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் விசாரணை
- > நீர் நிலைகளை அண்மித்துள்ள மக்களை அவதானமாக இருக்குமாறு கோரிக்கை
- > ஈராக்கில் 5 இடங்களில் குண்டு வெடிப்பு : 34 பேர் பலி