அமெரிக்காவை கண்டித்து அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)
September 18, 2012 12:28 pm
அமெரிக்காவில் முகமது நபி (ஸல்) அவர்களை அவமானப்படுத்தும் வகையில் வீடியோ நாடா வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டதைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை அக்கரைப்பற்று, பிரதேசத்தில் ஹர்தாலும் கண்டனப் பேரணியும் இடம்பெற்றது.
இதற்கான அழைப்பினை அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம், வர்த்தகர்களின் சங்கம் மற்றும் அக்கரைப்பற்று மாநகரசபையினர் விடுத்திருந்தனர்.
இதனையடுத்து பிரதேசத்தின் கடைகள் வங்கிகள், பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் அரசஅலுவலகங்கள் யாவும் செயலிழந்துள்ளதுடன் பயணிகள் போக்குவரத்துகள் எதுவும் இன்றி பஸ்நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டன.
அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பில் இருந்து இப் பேரணி ஆரம்பமாகியது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் அமெரிக்கா ஒழிக மற்றும் பல்வேறு கேசங்கள் எழுப்பியவாறு முகமது நபியை இழிவுபடுத்தும் வீடியோவை உடனடியாக தடைசெய், இஸ்லாத்துக்கு எதிரான வன்முறைகளை நிறுத்து போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவியை அட்டாளைச்சேனை வரை இழுத்துச் சென்று எரித்தனர்.
(அத தெரண நிருபர்)

- > புனே வாரியர்ஸ் விலகல்!
- > கள்ளநோட்டு கும்பலுக்கு விடுதலைப் புலிகளோடு தொடர்பு - தமிழக பொலிஸ்
- > ஜெனிவாவில் மைத்திரிபாலவிற்கு கவச வாகன பாதுகாப்பு
- > மும்பையை வீழ்த்தி அதிரடியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது சென்னை
- > உதட்டு சாயத்தை திருடி மாட்டிக்கொண்ட பிரபல தமிழ் நடிகை
- > மின் கட்டண உயர்வு: பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை
- > பஸ் நிலையத்தில் மனைவியை குத்திக் கொன்ற கணவன்!
- > மின்சாரம் தாக்கி இளைஞர் பலி
- > ராஜீவ் காந்தியை கொல்ல மைசூரிலும் சதி நடந்தது?
- > மியன்மாரில் பௌத்த பிக்குவை கொன்ற ஆறு முஸ்லிம்களுக்கு சிறை