Back to Top

ஹப்புத்தளையில் ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

September 21, 2012  09:37 am

Bookmark and Share
ஹப்புத்தளை - ரயில் நிலையத்திற்கு முன்பாக ஓடும் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (20) இரவு 08.34 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தபால் ரயிலில் மோதுண்டே 33 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(அத தெரண - தமிழ்)