கிழக்கு மாகாண பிரதம செயலாளர் நியமனம் குறித்து சிக்கல்!
September 21, 2012 10:33 am
கிழக்கு மாகாண சபையில் புதிதாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டது 13ஆவது திருத்தச் சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான, சிறுபான்மைச் சமூகத்துக்கு விடுக்கப்படும் சவாலாகும்.
அப்படியானால் இதனை எதிர் கொள்வதற்கு சிறுபான்மைச் சமூகம் தயாராக வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
புதிய கிழக்கு மாகாண பிரதம செயலாளராக குருநாகலைச் சேர்ந்த ரஞ்சித் அபேகுணவர்த்தன நியமிக்கப்பட்டமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
13ஆவது திருத்தச் சட்டத்தில் மாகாண சபையின் பிரதம செயலாளரை நியமனம் தொடர்பான சரத்தில், பிரதம செயலாளரை மாற்றுவதாக இருந்தால், மாகாண முதலமைச்சரின் சிபாரிசினைப் பெற்றாக வேண்டும்.
இம்மாதம் 17ஆம் திகதி பகல் 2 மணிக்கு ஜனாதிபதியிடம் சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட புதிய முதலமைசசர் இருக்கையில், 19ஆம் திகதி பகல் ஜனாதிபதி செயலகத்திலிருந்து புதிய பிரதம செயலாளரின் நியமனம் தொடர்பான கடிதம் கிழக்கு மாகாண சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டவர் மத்திய அரசாங்கத்தில் அமைச்சு ஒன்றின் மேலதிக செயலாளராக செயற்பட்டவர் என அறிய முடிகிறது.
இந்த நிலையில் இந்த நியமனம் நடைபெற்றமை புதிய முதலமைச்சருக்குத் தெரிந்து நடைபெற்றதா என அறிய விரும்புகிறேன். அப்படியானால் ஆரம்பத்திலேயே மாகாண முதலமைச்சருக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தினை முதலமைச்சர் துஸ்பிரயோகம் செய்கிறாரா?. அல்லது ஜனாதிபதி தன்னிச்சையாக எடுத்த முடிவா.
13ஆவது திருத்தச்சட்டத்தில் முதலமைச்சர் பிரதம செயலாளரை நியமிப்பதாக இருந்தால் மாகாண ஆளுனர் ஊடாகவே மேற்கொள்ளமுடியும். அவ்வாறில்லாமல் நடைபெற்றுள்ளமையானது மாகாண முதலமைச்சர் தமது அதிகாரத்தினை ஜனாதிபதிக்கு வழங்கினாரா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. அவ்வாறு அவர் எவ்வாறு அதிகாரங்களைக் கொடுக்க முடியும்.
அப்படியாக இருந்தால் இது, 13ஆவது திருத்தச்சட்டம் மூலமாக சிறுபான்மைச் சமூகத்தினருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் மீதான, சிறுபான்மைச் சமூகத்துக்கு விடுக்கப்படும் சவாலாகும். இதனை எதிர் கொள்வதற்கு சிறுபான்மைச் சமூகம் தயாராக வேண்டும்.
அதே நேரம் இது தொடர்பாக கிழக்கு மாகாண சபையில் ஆரம்பத்திலேயே விவாதத்துக்கு எடுத்து கொள்ள பிரேரணையை முன்வைப்பதோடு, கிழக்கு மாகாண சபையில் நியமனம், நிதி ஒதுக்கீடு, ஏனைய விடயங்கள் விகிதாசார அடிப்படையில் மேற்கொள்ளவும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிககு முன்னுரிமையளிக்கவும் நிரந்தர திட்டம் ஊடாக நிதியை ஒதுக்குவதற்கும் ஆவன செய்ய வேண்டும் எனும் பிரேரணையை முன்வைப்பதாக அவர் தெரிவித்தார்.

- > வெளிநாடுகளிலுள்ள 10 பேருக்கு மரண தண்டனை: இலங்கையால் காப்பாற்ற முடியாது!
- > ஸ்ரீசாந்துடன் ஹோட்டல் அறையில் இருந்த அந்த நடிகை யார்?
- > வவுனியா விவசாயிகளின் வயல் நிலங்களை இராணுவம் சுவீகரிப்பு (படம்)
- > தெதுறு ஓயாவிற்கு சிறுவர்கள் இருவர் பலி
- > மேடையில் பேசிக் கொண்டிருந்த சீமான் தப்பிஓட்டம் : தொண்டர்கள் தேடல்
- > நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் $1.9 மில்லியனுக்கு ஏலம்
- > அமெரிக்கா, இஸ்ரேலுக்காக உளவு பார்த்த இருவர் தூக்கிலிடப்பட்டனர்
- > பகிஸ்கரிப்பில் ஈடுபடும் பஸ்களின் வீதி அனுமதிப் பத்திரம் ரத்து: ரொசான் குணவர்தன அறிவிப்பு
- > 31 வருடங்களின் பின் உரியவரை சென்றடைந்த கடிதம்
- > விளையாட்டுகளில் முன்னணியில் விளங்கும் SLIIT மாணவர்கள்