இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இலங்கை பிரஜை கைது
September 23, 2012 08:22 am
இலங்கையில் இருந்து விமானத்தின் மூலம் இந்தியா சென்ற பயணியிடம், 18 லட்சம் இந்திய ரூபா பெறுமதியான கடத்தல் தங்கத்தை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கொழும்புவில் இருந்து, நேற்று (22) காலை 8:30 மணிக்கு வந்த ஜெட் ஏர்வேஸ் விமான பயணிகளை, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
இதில், சுற்றுலா விசாவில், சென்னை வந்த கொழும்பைச் சேர்ந்த முகம்மது அமானுதீன், 43 என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. துணி பையில் கொண்டு வந்த அவரிடம், முழுமையாக சோதனை நடத்தப்பட்டது.
இதில், ஒன்றும் சிக்கவில்லை. அவரது பையில் வித்தியாசமாக இருந்ததால், அதை தனி அறையில் வைத்து, கிழித்து அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில், பையின் கீழ் பகுதியில் கறுப்பு நிற தகடுகள் இருந்தன. அந்த தகடை ஆய்வு செய்து பார்த்த போது தங்க கட்டி என்பது தெரிய வந்தது.
ஸ்கேனிங்கில் தெரியாமல் இருப்பதற்காக, தங்க கட்டியை தகடு போன்று உருக்கி, அதில் கறுப்பு நிற பெயின்ட் அடித்திருப்பது தெரியவந்தது. மொத்தம், 560 கிராம் எடை கொண்ட, 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் முகம்மது அமானுதீனிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
அவரை கைது செய்து விசாரித்த போது, மண்ணடியில் உள்ள வியாபாரியிடம் இதை கொடுத்துவிட்டு வந்தால், 10 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினர் என்று தெரிவித்தார்.
அந்த கடத்தல் கும்பல் யார்? சென்னையில் இந்த தங்கத்தை வாங்கும் கும்பல் யார்? என்பது குறித்து சுங்கத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
(தினமலர்)

- > பஸ்ஸுடன் கார் மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலி
- > காலி முகத்திடல் யுத்த வெற்றி விழாவில் படகு மூழ்கி ஒருவர் மாயம்
- > முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிப்பு!
- > பேராதனை நகர் சில்லரை கடையில் தீ
- > லொறி கவிழ்ந்து கால்வாயில் யூரியா உரம் கலப்பு
- > கந்தக்காடு பகுதியில் நீரில் மூழ்கி இருவர் பலி
- > வவுனியாவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு
- > எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் மன்னாரில் கைது
- > ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு அனுமதி சட்டம்: பிரான்ஸில் நிறைவேற்றம்
- > தேசிய மட்ட உதைப்பந்தாட்ட போட்டிகள் மன்னாரில் ஆரம்பம்