கடலில் தவறி வீழ்ந்து மீனவர் மாயம்: இருவர் உயிர் பிழைப்பு
September 23, 2012 07:59 pm
இயந்திரப் படகில் ஆழ்கடல் மீன்பிடிக்காக சென்று திரும்பிய மீனவர் ஒருவர் கடலில் ஏற்பட்ட உக்கல் காரணமாக கடலில் தவறி வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் சாய்ந்தமருது -10 இல் வசிக்கும் இரு பிள்ளைகளின் தந்தையான எம்.வை.லத்தீப் (வயது-52) என தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, அப்படகில் மூவர் பயணித்துள்ளனர். காணாமல் போயுள்ளவர் படகை செலுத்தியுள்ளார்.
அஷ்ரப் (வயது-31), சின்னவர் (வயது-42) ஆகிய இருவரும் தூக்கத்தில் இருந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் எதுவித பாதிப்பும் ஏற்படாது தப்பித்துள்ளனர்.
இவரை கண்டுபிடிக்கும் பணியில் 4 மீனவப் படகுகளும், கடற்படையினரும், விமானப் படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காணாமல் போன மீனவரை மீட்கும் வரை ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடப்போவதில்லையென அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடியாளர்கள் சங்கத் தலைவர் சலாம் தெரிவித்தார்.
(அத தெரண - நிருபர்)

- > ஹக்கீம் பங்கேற்கும் திறப்பு விழாவிற்கு கிழக்கு முதல்வர் திடீர் தடை!
- > மரக்கறி என கஞ்சா கடத்திய மூவர் கைது
- > லிந்துலையில் தந்தையால் தாக்கப்பட்டு ஐந்துமாதக் குழந்தை பலி
- > இந்த அரசாங்கத்தை கவிழ்க்க சூழ்ச்சி தேவையில்லை - ரணில்
- > ஈழ தமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த உதவியை விளக்க வேண்டும் - நாராயணசாமி
- > 19வது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடாது
- > ஓரின திருமணச் சட்டத்திற்கு எதிராக எழுத்தாளர் தற்கொலை