Sri Lanka
September 3, 2010  04:06:PM

விசேட செய்திகள்

மனுஷ நாணயக்காரவும் அரசு பக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார அரசாங்கத்தின் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

8ம் திகதி கருப்பு ஜூலை

எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 8ம் திகதி காலை 10 மணிக்கு பொரளை ஆயுர்வேத சந்தியில் ஆர்பாட்டமொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

வவுனியா சேமமடுவில் ஆயிரம் பேர் மீள்குடியேற்றம்

வவுனியா சேமமடு பிரதேசத்தில் 300 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரம் பேர்வரை மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர். வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சால்ஸ் தலைமையில் இவர்களுக்கு வாழ்வாதார உபகரணங்கள் உட்பட தலா ஐயாயிரம் ரூபா பணமும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு வழி ஏற்படுத்தியது ஐக்கிய தேசிய கட்சியே

யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக நிபந்தனைகள் இன்றி செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஒரே ஒரு அரசியல் கட்சி மக்கள் விடுதலை முன்னணி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாப்பு சீர்திருத்தம் சட்டவிரோதமானது

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தம் சட்டவிரோதமானது என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாம் பதவி காலம் குறித்த பிரச்சினை நீதிமன்றில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் ஜனாதிபதி பதவி காலம் குறித்த யாப்பு சீர்திருத்தத்தினை மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இனமுரண்பாட்டை தடுத்து நிறுத்த அலங்கார வளைவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி - ஆரையம்பதி பிரதேசங்களின் எல்லைப்பகுதியில் தமிழர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் அலங்கார வளைவு அமைப்பதற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ப.பிரசாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இரண்டு மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளார்.

25 வருடத்துக்கு பின்னர் காத்தான்குடி - பதுளை பஸ்சேவை

காத்தான்குடிக்கும் பதுளைக்கும் இடையிலான பஸ்சேவையொன்று 25 வருடங்களுக்குப பின்னர் மீண்டும் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பயணிகள் மகிழ்ச்சி

யாப்பு சீர்திருத்தம் ஆதரவளிக்கக் கூடியதே

அரசாங்கத்தின் யாப்பு சீர்திருத்தம் ஆதரவளிக்கக் கூடியது என ஐக்கிய தேசிய கட்சியின் ஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி செயலாளருமான லக்க்ஷ்மன் செனவிரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஏல் குணசேகர அரசாங்கத்திற்கு

ஐக்கிய தேசிய கட்சியின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏல் குணசேகர அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். கொழும்பில் சற்று முன்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

ரணில் இந்தியாவில்

எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார். இவர் நேற்று மாலை இந்தியா நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்

மருதனார்மடம் காங்கேசன்துறை விதியில் விபத்து

நேற்று இரவு இடம் பெற்ற வாகண விபத்தில் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் காங்கேசன்துறை விதி, றொட்டி ஆலடிச்சந்தியில் மோட்டார் சையிக்கிளும் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றது.

ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு சிறை

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்திய 26 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தயாராக இருந்த 140 பேர் அண்மையில் மாத்தறையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து குறித்த 26 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கூட்டமைப்பில் எதிர்ப்பு இல்லை

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் திட்டத்திற்கு அரசாங்கத்தில் சேர்ந்துள்ள சில கட்சிகள் எதிர்ப்பை வெளியிடுமென தகவல் வெளியாகியுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனைத்து கட்சிகளும் யாப்பு சீர்திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவர் என ஆளும்கட்சி பிரதம கொரடா தினேஸ் குணவர்த்தன

வாக்களிப்பை புறக்கணிக்க சில கட்சிகள் தீர்மானம்

அரசாங்கத்தின் உத்தேச அரசியல் யாப்பு சீர்திருத்தம் பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் நாளன்று சபை நடவடிக்கைகளை நேரகாலத்துடன் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் யாப்பு திருத்த யோசனைக்கு வாக்களிப்பை புறக்கணிக்க அரசாங்கத்தில் இணைந்துள்ள கட்சிகள் சில

அகில இலங்கை மத்தியகிழக்கு சேவையாளர்கள் சங்கம் எச்சரிக்கை

சவூதி அரேபியாவில் வீட்டுப்பணிப்பெண் சித்திதவதைக்கு உட்படுத்தப்பட்ட விடயம் குறித்து சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென அகில இலங்கை மத்தியகிழக்கு சேவையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் போதிய ஈடுபாட்டைக் காட்டவில்லை என அந்த சங்கத்தின் தலைவர் ரஞ்சன் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மன்னார் விவசாயிகளுக்கு ஜப்பான் உதவி

மன்னாரில் விவசாய நடவடிக்கையை ஊக்கிவிக்கும் மாணியத்திட்டம் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று மன்னார் நகர மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டிருக்கின்றது. மன்னார் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று கமநல மேம்பாடு எனும் தொனிப்பொருளிலான நிகழ்ச்சி மன்னார் நகர மண்டபத்தில் மன்னார் கமநல திணைக்களத்தின் உதவி ஆணையாளர்

508 பேர் நாளை பெற்றோரிடம் ஒப்படைப்பு

புனர்வாழ்வளிக்கப்பட்ட 508 முன்னாள் புலி உறுப்பினர்கள் நாளை தமது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சு ​தெரிவிக்கின்றது. இதன் போது தொழிற்பயிற்சியை பூர்த்தி செய்த 180 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும் உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன.

சேமமடு மக்களுக்கு இந்திய பொருட்கள் கையளிப்பு

மீளக்குடியேறிய சேமமடு மக்களுக்கு இந்தியா அன்பளிப்பாக வழங்கியுள்ள கட்டடப் பொருட்கள் நேற்று கையளிக்கப்பட்டன. சேமமடு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைபவ ரீதியாக இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன.

முள்ளிகுளம் பிரதேசத்தில் தலைமைக் காரியாலயம்

கடற்படையினரின் வடமேல் பிராந்திய தலைமைக் காரியாலயம் இன்று மன்னார் மாவட்டத்தின் முள்ளிகுளம் பிரதேசத்தில் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முயற்சி

இலங்கைக்கு வெடி பொருட்களை கடத்த முற்பட்ட இருவர், தமிழ் நாட்டு தொண்டி கடற்பரப்பில் வைத்து வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிகழ்வுகள்

19 ஆம் நாள் திருவிழா

19 ஆம் நாள் திருவிழா

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர் கந்தன் ஆலயத்தில் 19 ஆம் நாள் திருவிழா இடம்பெற்றது. மாலையில் வள்ளி தெய்வயானை சமேதராக முருகப் பெருமான் வெளி வீதியுலா வந்தருளிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Full Story >>
நிருபமா - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு

நிருபமா - ஜீ.எல்.பீரிஸ் சந்திப்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவச் செயலாளர் நிருபமாராவிற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

Full Story >>

விளையாட்டு

டெங்கு குறித்து தெளிவுப்படுத்துமாறு காமன்வெல்த் குழுவிற்கு கடிதம்
டெங்கு குறித்து தெளிவுப்படுத்துமாறு காமன்வெல்த் குழுவிற்கு கடிதம்

இந்திய தலைநகர் புதுடில்லியில் பரவி வரும் டெங்கு காய்ச்சல் தொடர்பாக காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவிடம் விளக்கம் கோரி 24 நாடுகள் கடிதம் அனுப்பியுள்ளன. புதுடில்லியில் கடந்த சில தினங்களாக டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. அடைமழை பெய்ததை அடுத்து யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஷேன் வாட்சன் கண்டனம்
ஷேன் வாட்சன் கண்டனம்

சர்வதேச கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் காரணமாக தடுமாறிக் கொண்டுள்ளது. ஆனால் ஐ.சி.சி.,யின் ஊழல் தடுப்புக் கண்காணிப்புக்குழு செயல்படுவதாகத் தெரியவில்லை, என, ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் ஐ.சி.சி விசாரணை
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களிடம் ஐ.சி.சி விசாரணை

ஆட்ட நிர்ணய சதியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் அணி வீர்கள் மூவர் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் இஜாஸ் பட் நாளை மறுதினம் விசாரணை நடத்துவார் எனத் தெரிகிறது. இஜாஸ் பட், லண்டனில் உளள சர்வதவுள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைமைச் செயல் அதிகாரி ஹரூண் லோர்கட்டும் நாளை மறுதினம் பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தவுள்ளார்.

32வது பெடரேஷன் கோப்பை
32வது பெடரேஷன் கோப்பை

32வது பெடரேஷன் கோப்பை பூர்வாங்க நாக் அவுட் தகுதிச்சுற்று முதல் போட்டியில் வாஸ்கோ ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், சேசா புட்பால் கழக அணியும் மோதுகின்றன. முதல் போட்டி இம்மாதம் 14ஆம் தேதி மாபூசாவில் உள்ள டூலர் அரங்கில் நடைபெறுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், விளையாட்டு அமைச்சகத்துக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

கிரிக்கெட் சூதாட்டப் புகார் தொடர்பாக பதிலளிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கு லாகூர் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. லாகூரைச் சேர்ந்த சௌத்ரி இஷ்திக் அகமது என்ற வழக்கறிஞர், லாகூர் உயர் நீதிமன்றத்தில் கிரிக்கெட் வீரர்கள் மீது தேச துரோக குற்றம் சுமத்தி மனு ஒன்றை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

சினிமா

ரஜனி வீட்டுத் திருமணத்திற்கு ராகவா லோரன்ஸ் அன்னதானம்
ரஜனி வீட்டுத் திருமணத்திற்கு ராகவா லோரன்ஸ் அன்னதானம்

நடன இயக்குநராக திரையுலக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் இயக்குநராக வெற்றியடைந்து தற்போது கதாநாயகனாக விளங்கும் ராகவா லாரன்ஸ், இயல்பிலேயே இரக்க மனம் படைத்தவர். அது மட்டுமல்ல சிறு வயதில் பல கஷ்டங்களையும் அனுபவித்தவர். அதன் காரணமாக, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அதிகம்.

ரஜினி மேக்கப் இல்லாமலேயே கவந்திழுப்பவர்
ரஜினி மேக்கப் இல்லாமலேயே கவந்திழுப்பவர்

மலையாள சூப்பர் ஸ்டார்களை மேக் இல்லாமல் பார்க்கமுடியாது என்றும், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினி மேக்கப் இல்லாமலேயே கவந்திழுப்பவர் என்றும் சர்ச்சையுடன் சம்பந்தம் பேசியுள்ளது ப்ருத்வி கொடுத்த பேட்டி ஒன்று.

வழிகாட்டிய ஶ்ரீதேவிக்கு வலி கொடுத்தார் அசின்
வழிகாட்டிய ஶ்ரீதேவிக்கு வலி கொடுத்தார் அசின்

பாலிவூட்டில் காலூன்ற தனக்கு பெரிதும் உதவிய நடிகை ஸ்ரீதேவி தயாரிக்கும் படத்தில் நடிக்க அசின் மறுத்துவிட்டார். அசின் மும்பை பட உலகில் அறிமுகமானபோது யாரையும் தெரியாமல் தடுமாறினார். அப்போது ஸ்ரீதேவிதான் அவருக்கு வலிய வந்து உதவினார். தான் குடியிருக்கும் வீடு அருகிலேயே அவருக்கும் ஒரு வீடு பார்த்து குடியமர்த்தினார்.

ரஜனியின் விருப்பம் சந்திரமுகி-2-ல் அஜீத்
ரஜனியின் விருப்பம் சந்திரமுகி-2-ல் அஜீத்

அஜீத்தும் ரஜினியும் மிக நெருக்கமானவர்கள் என்பது திரையுலகத்திற்கு மட்டுமல்ல, சாதாரண ரசிகர்களுக்கு கூட தெரியும். ரஜினி சொன்னால் அஜீத் கேட்பார், அது எதுவாக இருந்தாலும். அந்தளவுக்கு அவரை நம்பும் தல, சூப்பர் ஸ்டாரின் அட்வைஸ் கேட்டு ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் விபத்து, ஸ்ருதிஹாசன் காயம்
படப்பிடிப்பில் விபத்து, ஸ்ருதிஹாசன் காயம்

ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கடந்த சில மாதங்களாகவே சென்னையில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படத்தை தயாரிப்பது உதயநிதி ஸ்டாலின் என்பதாலோ என்னவோ, முக்கிய சாலைகளில் படம் எடுப்பதற்கு பர்மிஷன் வாங்குவதில் பெரும் சிக்கல் எழுவதில்லை.

அரவாணியாக, யானைப்பாகனாக விஷால்
அரவாணியாக, யானைப்பாகனாக விஷால்

அவன் இவன் படத்தில் அரவாணியாக நடித்துவருகிறார் விஷால் என்று மீடியா ஒருப்பக்கம் மணியாட்டிக் கொண்டிருக்க, தனது அடுத்த படத்தில் உதவி யானைப்பாகனாக நடிக்க தயாராகிவிட்டார் விஷால்

இப்போதைக்கு கல்யாணமில்லை
இப்போதைக்கு கல்யாணமில்லை

ஜெனிலியாவும், நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் திருமணம் செய்துகொண்டதாக வந்த தகவலை அடுத்து ஷாக் ஆகியுள்ளார் ஜெனிலியா. ரிதேஷும் ஜெனியாவும் காதலித்து வருகின்றனர். இருவருவே அதை மறுத்து வந்தாலும் விழாக்களுக்கு இருவரும் ஒன்றாக வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

டிசம்பரில் பிரபுதேவா-நயன் திருமணமா?
டிசம்பரில் பிரபுதேவா-நயன் திருமணமா?

பிரபுதேவா, நயன்தாரா காதல் இறுக்கமாகியுள்ளது. இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிய வந்ததால் அதனை கைவிட்டனர். திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் ஒன்றாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

ஸ்லம்டாக் குழுவுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்
ஸ்லம்டாக் குழுவுடன் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்

8 ஆஸ்கர் விருதுகளை தட்டிச்சென்ற ஸ்லம்டாக் மில்லனியரின் அதே குழு, மீண்டும் ஒரு முறை இணைந்திருக்கிறது. முந்தைய படத்தில் மென்மையான காதலை காட்டிய டேனி பாயல் தற்போது வித்தியாசமான திரைக்கதையுடன் மலை உச்சியில் நடக்கும் த்ரில்லர் கதையை கையாண்டுள்ளார். படத்தின் பெயர் 127 ஹவர்ஸ்.

எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா
எனக்குப் பிடிக்காத நபர் ஆர்யா

தமிழ் சினிமாவில் எனக்குப் பிடிக்காத நடிகர் ஆர்யா தான் என்றார் நடிகர் சூர்யா. சென்னையில் நடந்த ஒரு இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், எனக்கு தமிழில் பிடிக்காத நடிகர் ஆர்யாதான். நான் இப்படிச் சொல்லக் காரணம் உண்டு. என் வீட்டில் எல்லோரும் அமர்ந்து டிவி பார்க்கும் போது திடீரென்று பாடல் காட்சிகளில் ஆர்யாவின் சீன் வந்துவிட்டால் எல்லோரும்

இன்றைய நாள்

வௌ்ளி

03

03-09-2010
சுபநேரம் காலை
09.15 - 10.00
எம கண்டம் 03.00 - 04.30
ராகு காலம் 10.30 - 12.00

ராசி பலன்

போட்டி உயர்வு
பிரயாசம் தடை
நன்மை சுபம்
அமைதி உற்சாகம்
பொறுமை பணிவு
உயர்வு மகிழ்ச்சி

கருத்துக் கணிப்பு

சன் சீ கப்பலில் கனடா சென்ற தமிழர்களுக்கு, அகதி அந்தஸ்து...,
வழங்கப்பட வேண்டும்
வழங்க கூடாது
எதுவானாலும் சரி

View results

தகவல் & தொழில்நுட்பம்

14 வயது சிறுமி 6 அடி 9 அங்குலம்
14 வயது சிறுமி 6 அடி 9 அங்குலம்

எனது உயரமே எனக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்தித் தந்துள்ளது என பிரேஸிலைச் சேர்ந்த 14 வயது சிறுமி எலிசனி சில்வா கூறுகிறார். 14 வயது சிறுமி எலிசனி சில்வாவின் உயரம் என்ன தெரியுமா? 6 அடி 9 அங்குலம். அடேயப்பா... ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? சாதகமான சூழலை மட்டுமல்ல, சில வேளைகளில் பாதகமாகவும் தனது உயரம் அமைந்து விடுகின்றது என்றும் அவர் கூறுகின்றார்.

ஆயுளில் 12 ஆண்டுகள் இழக்கப்படும்
ஆயுளில் 12 ஆண்டுகள் இழக்கப்படும்

வளரும் இளைய தலைமுறையினரிடம் காணப்படும் தவறுகளில் மிக முக்கியமான 4 தவறுகள் எது தெரியுமா?
1) புகைப்பிடித்தல்
2) மது அருந்துதல்
3) உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல்
4) தவறான உணவுப்பழக்கம்

நாளுக்கு நாள் 3டி வளர்ச்சி
நாளுக்கு நாள் 3டி வளர்ச்சி

3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன.

விரும்பினால் மழை
விரும்பினால் மழை

விஞ்ஞானம் ஏற்கனவே செயற்கை மழை பெய்விக்கும் முறையை கண்டுபிடித்திருந்தது. குறிப்பிட்ட அளவில் பெரிதான இயற்கை மேகத்திரள் இருந்தால்தான் இந்த முறையில் மழை பெய்விக்க முடியும். தற்காலத்தில் காலம் தவறி பெய்துவரும் மழை, தண்ணீரின் அவசியத்தை நன்கு உணர வைத்திருக்கிறது.

மதுவில் பாம்பின் விசம்
மதுவில் பாம்பின் விசம்

பாம்பு ஒயின் வியட்நாமில் உபயோகபடுத்தபடும் ஒரு விதமான மது வகையாகும், முழு பாம்பு உயிருடன் மது பாட்டினுள் அடைக்கபட்டு அந்த பாம்பின் விசம் கொஞ்சம் கொஞ்சமாக மதுவில் கலந்துவிடும்.

 
ஜனனி
 
Paying homage at the Gal Viharaya in Polonnaruwa.  Hansani Dilakshika  Devi Balika Roo Dekma
Copyright © 2008 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal. | Disclaimer